தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளதற்கு யார் காரணம்?: உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளதற்கு யார் காரணம்? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாகுவதில்லை, பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் என நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வளவு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தந்தது அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு அனுமதி வழங்கியவர்கள் தான் காரணம் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

Related Stories: