காவிரியில் இருந்து 155 டி.எம்.சி நீர் வந்துள்ளது : ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு தகவல்

புதுடெல்லி,:காவிரியில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுவில் 155.7 டி.எம்.சி தண்ணீர் வரத்து கணக்கிடப்பட்டுள்ளது என நேற்று நடந்த 37வது ஒழுங்காற்று குழு கூட்டத்தின் போது தமிழக அரசு தரப்பில் புள்ளிவிரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவிரி ஒழுங்காற்று குழுவின் 37வது கூட்டம் வீடியோ கான்பரனஸ் மூலம், அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நேற்று நடந்தது. பிற்பகல் 1.30 மணியளவில் தொடங்கிய கூட்டம் மாலை 5மணி வரை நடைபெற்றது. இதில் நான்கு மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் சார்பாக காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன், துணைத்தலைவர் பட்டாபிராமன் மற்றும் உறுப்பினர்கள் ராமமூர்த்தி, திருவேட்டை செல்லம் ஆகியோர் திருச்சி அலுவலகத்தில் இருந்து பங்கேற்றனர்.

இதையடுத்து கூட்டத்தின் போது நீர் பங்கீடு, அணை பாதுகாப்பு, பராமரிப்பு உட்பட அனைத்து ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பாக காவிரியில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு ஜூன் 1ம் தேதி முதல் அக்டோபர் 26ம் தேதிவரை மொத்தம் 155.7 டி.எம்.சி தண்ணீர் வந்தடைந்ததாக தமிழக பிரதிநிதிகள் தரப்பில் புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டது. இதேப்போன்று மற்ற மாநிலங்களும் தங்களுக்கான நீர் புள்ளி விவரங்களை ஒழுங்காற்று குழு முன்னிலையில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆலோசனைகளும் நாளை நடக்கவுள்ள காவிரி ஆணைய கூட்டத்தின் போது அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும்.

Related Stories:

>