கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம் டீசல் விலை லிட்டருக்கு 3, பெட்ரோல் 6 உயர்கிறது?

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கினால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீரமைக்க மத்திய அரசு கூடுதல் சிறப்பு நிதி சலுகைகளை அறிவித்தது. இதற்கான கூடுதல் நிதி தேவைகளுக்காக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 3 முதல் ரூ.6 வரை மத்திய அரசு உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ.60,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. எனவே, அவற்றின் மீதான கலால் வரியை உயர்த்த இதுவே சரியான தருணம் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6ம், டீசல் விலை ரூ.3 உயரும் வாய்ப்புள்ளது.

Related Stories:

>