பாஜ கல்வியாளர் பிரிவு செயலாளர் நீக்கம்?

சென்னை: மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாஜக தலைவர் எல்.முருகனும் காலதாமதம் செய்யாமல் ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என தமிழக ஆளுநருக்கு பாஜகவின் கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நந்தகுமாரை பாஜ மாநில கல்வி பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி, தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு தலைவர் தங்க கணேஷ் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: