திருநங்கைகள் சங்கத் தலைவி சங்கீதாவை கொன்றது யார்?.. பிரியாணி தொழில் ஏற்பட்ட போட்டியே காரணம்..: திருநங்கைகள் தகவல்

கோவை: கோவையில் திருநங்கைகள் சங்கத் தலைவி சங்கீதா கழுத்து அறுத்து கொல்லப்பட்டதற்கு பிரியாணி தொழிலில் ஏற்பட்ட போட்டியே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் திருநங்கைகள் சங்கத் தலைவராக இருந்து வந்த சங்கீதா, பல ஆண்டுகளாக பிரியாணி செய்யும் தொழில் செய்து வந்தார். 65 வயதான இவர், கடந்த மாதம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் டிரான்ஸ் கிட்சேன் பிரியாணி என்ற ஹோட்டலை தொடங்கினர்.

அந்த ஹோட்டலில் 10 திருநங்கைகள் பணியாற்றி வருகின்றனர். அந்த ஹோட்டலுக்கு மக்களிடத்தில் வரவேற்பு அதிகரித்து உள்ள நிலையில், நேற்று சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கண்டுபிடிக்கவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று காவல் ஆணையரிடம் கோவை திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உக்கடம் பகுதியில் பிரியாணி தொழில் செய்து வந்த அனிஃபா என்ற மற்றோரு திருநங்கையும் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் கொலையாளி இன்றும் கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கொலை செய்யப்பட்ட திருநங்கை சங்கீதா மற்றோரு இடத்தில் பிரியாணி கடை திறக்க திட்டமிட்டு இருந்தார்.

Related Stories: