வைகையில் திடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மதுரை: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலுள்ள வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசனத்திற்காக முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் மதுரை வந்தடைந்தது. தேனி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழையால் வைகையாற்று பகுதிக்கு அதிக அளவில் நீர்வரத்து காணப்படுகிறது.

இதனால், மதுரை வைகை ஆற்றில் 2வது நாளாக இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் எதிரொலியாக நகரில் ஆற்றுப்பகுதியின் அருகே ஆங்காங்கே உள்ள இணைப்புச்சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வைகை கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெள்ள அபாய எச்சாிக்கை விடுத்துள்ளார். கரையோர பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

The post வைகையில் திடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: