விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கணும்… ஆலமரம் உதிரும்… வேப்பமரம் கருகும்… செல்லூர் ராஜூவின் அட்வைஸ்… பஞ்ச்…

மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘‘எடப்பாடி பழனிசாமிக்கு, அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். யார் வாழ்த்து சொன்னாலும் எங்களுக்கு மகிழ்ச்சி. தேர்தல் ஆணையம் பாஜவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என அரசியல்கட்சிகள் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்கிறீர்கள். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். நடிகர் விஜய் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்’’ என்றார்.

தொடர்ந்து, ‘‘அதிமுகவை பிளவுபடுத்தும் வேலையை பாஜவே செய்யும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளாரே?’’ என்று நிருபர்கள் கேட்க, இதற்கு செல்லூர் ராஜூ நேரடி பதில் தராமல், ‘‘அதிமுக பிளவுபட்டா இருக்கு? ஏம்ப்பா… பிளவுபட்டா இருக்கு? பிளவு பட்டாப்பா இருக்கு?’’ என்று, தன்னைச் சுற்றி இருந்த அத்தனை பேரையும் திரும்பிப் பார்த்து கேள்வி கேட்டார்.

பிறகு, ‘‘எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கோம். ஒன்றிரண்டு பேர் போவாங்க தம்பி. ஆலமரத்துல வெயில் காலத்தில் நிறைய இலைகள் உதிரும். திரும்பவும் தளுக்கும். வேப்பமரம் ஒரு நேரத்தில் கருகிப்போயிருக்கும். அதுமாதிரி ஒரு சமயத்துல அதிமுகவை நினைச்சாங்க… இது ஈடேறாதுன்னு. எடப்பாடி பழனிசாமி கட்சியை வீர, விவேக செயல்பட்டால் நிமிர்த்திக் காட்டிட்டாரு’’ என்றார்.

The post விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கணும்… ஆலமரம் உதிரும்… வேப்பமரம் கருகும்… செல்லூர் ராஜூவின் அட்வைஸ்… பஞ்ச்… appeared first on Dinakaran.

Related Stories: