ஒரத்தநாடு திமுக ஒன்றிய செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் காந்தி (55). திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர். புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஒரத்தநாடு முன்னாள் ஒன்றிய குழுதலைவர், துணை தலைவராக பதவி வகித்துள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 4 நாட்களுக்கு முன் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை காந்தி இறந்தார். இவருக்கு மனைவி கலாவதி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>