பீகார் சட்டமன்ற தேர்தல் : அக்.23ம் தேதி முதல் மொத்தம் 12 இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம்

பீகார் : பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக மொத்தம் 12 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். அக்.23ல் பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்குகிறார். பீகாரில் வரும் 28ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 3 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியும் களம் காணுகின்றன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் காங்கிரஸும் பாஜகவும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தங்களது நட்சத்திர பேச்சாளர்களை பிரச்சாரத்தில் களமிறக்கி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் நரேந்திர மோடியும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் நடத்த உள்ளனர். இந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி வரும் 23ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மொத்தம் 12 இடங்களில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். பிரதமர் மோடியின் கூட்டங்கள் முதல்கட்ட தேர்தல் முடிந்த பின் அக்டோபர் 20 முதல் தொடங்க உள்ளது.

இதற்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கான(என்டிஏ) தேர்தல் அறிக்கையும் வெளியாகும் எனக் கருதப்படுகிறது.கடந்த 2015 தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜகவிற்காக பிரதமர் மோடி 31 பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.2019 மக்களவை தேர்தலில் மீண்டும் என்டிஏவுடன் இணைந்து விட்ட நிதிஷுடன் 10 கூட்டங்களில் பேசி இருந்தார்.இதன்மூலம், என்டிஏவில் முக்கிய அங்கம் வகிக்கும் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் புகழ் மீண்டும் முன்னிறுத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.

Related Stories: