புனேவில் 6 மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,031 பேரின் லைசென்ஸ் ரத்து

புனே, : மகாராஷ்டிரா மாநிலம் புனே நகர காவல் துறையும், வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதத்தில் சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 11,031 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. ரேஷ் டிரைவிங், சிக்னல் ஜம்பிங், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டியவர்களின் டிரைவிங் லைசன்ஸை தற்போது தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்ட 11,031 பேரில் 4,092 பேர் செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டினர். 1,683 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினர். 1,752 பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினர். 1,541 பேர் போக்குவரத்து சிக்னலில் நிற்காமலும், 571 பேர் ரேஸ் டிரைவ் செய்த காரணத்தினாலும் ஓட்டுநர் உரிமம் ரத்து நடவடிக்கைக்கு ஆளாகினர்.

Related Stories: