சீனா, பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் 44 பாலங்கள் திறப்பு

புதுடெல்லி: சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்கு விரைவில் ஆயுதங்களையும், வீரர்களையும் கொண்டு செல்லும் வகையில் 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 44 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அருணாசலப்பிரதேசம் தவாங் செல்லும் வகையில் நெச்சிபூ கணவாய் சுரங்கபாதைக்காக அமைச்சர் ராஜ்நாத் அடிக்கல் நாட்டினார். 450 மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையால் அப்பகுதி எந்த வானிலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்கும்.

பின்னர் பேசிய அவர், ‘‘முன்பு பாகிஸ்தான் எல்லையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வந்தன. தற்போது சீன எல்லையில் பதற்றம் நிலவுகிறது. எல்லையில் பிரச்னையை உருவாக்குவதை ஒரு திட்டமாக வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். இதனால் 7,000 கிமீ எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த பாலங்கள் மூலமாக மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ராணுவ போக்குவரத்துக்கு உதவும். எல்லை விவகாரத்தில் இந்தியாதனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது’’ என்றார்.

Related Stories: