கிராம சபை கூட்டம் ரத்துக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்

சென்னை: கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் வேளாண் சட்டங்களை உடனே திரும்பிப் பெற வலியுறுத்தி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரோனாவை காரணம் காட்டி ரத்து செய்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோத செயல் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக கூட்டம் திரட்டி, விதிமுறைகள் இன்றி முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்கள் நடக்கிறது. கிராம சபை கூட்டம் நடத்தினால் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்பது ஏற்கக்கூடியது இல்லை. கிராமப்புற மக்களின் பிரச்சனைகள், தேவைகளை பற்றி பேச கிராமசபை கூட்டங்களில் தான் வாய்ப்பு உள்ளது என்று டி.டி.வி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: