அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் சேர்க்க வேண்டும்: முன்னாள் எம்பி பேச்சு

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.கஜா (எ) கஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வேங்கடமங்கலம் ரவி, குமிழி ஜான்சன், நல்லம்பாக்கம் துலுக்கானம், கீரப்பாக்கம் அரிகிருஷ்ணன், ஊனைமாஞ்சேரி லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுங்குன்றம் ஊராட்சி செயலாளர் ரங்கன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் கலந்து கொண்டு, உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அருமையான ஆட்சி செய்கிறார். பல நல்ல திட்டங்களை அறிவித்து, அதனை சாதனைகளாக படைத்து, அதன் மூலம் எல்லோரையும் பிரமிக்க வைத்திருக்கிறார். இதனை வரும் தேர்லின்போது வாக்காளர்களிடம் சென்று எடுத்துரைக்க வேண்டும். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மூலம் அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்றார்.

Related Stories:

>