திருப்பதி கோயிலில் ரூ.10.02 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கடந்த 9 நாட்களில் ரூ.10.02 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. பிரமோற்சவம் நடைபெற்ற நாட்களில் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்படி கடந்த 9 நாட்களில் 1 லட்சத்து 22,898 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 38,190 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.10 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரம் செலுத்தியுள்ளனர். இதில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ரூ.2 கோடியே 34 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இது ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஒரே நாளில் பக்தர்கள் அதிகளவு செலுத்திய உண்டியல் காணிக்கையாகும். 

Related Stories:

>