திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியை துப்பாக்கியால் சுட்ட எஸ்ஐ : டெல்லி போலீசில் பரபரப்பு

புதுடெல்லி, :திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியை, போலீஸ் எஸ்ஐ ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ெடல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள ஜி.டி.கர்னல் சாலையில் காயமடைந்த நிலையில் ஒரு பெண் கிடந்தார். அவ்வழியாக ரோந்து சென்ற ஷாபாத் பால் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயவீர், அந்தப் பெண்ணை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணை அவரது காதலனும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான சந்தீப் தஹியா (36) என்பவர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குபதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 இச்சம்பவம் டெல்லி போலீசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் கவுரவ் சர்மா  கூறுகையில், ‘லாகோரி கேட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப் தஹியா, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவருக்குள்ளும் காதல் இருந்துள்ளது. அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சந்தீப் தஹியாவிடம் வற்புறுத்தி உள்ளார். ஞாயிற்றுக் கிழமை (நேற்று) காரில் சென்றபோது இருவருக்குள்ளும் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த பெண்ணை சுட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. தலைமறைவாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் சந்தீப் தஹியாவை தேடி வருகிறோம்’ என்றார்.

Related Stories:

>