திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு : ரூ.10.02 கோடி காணிக்கை

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனத்தில் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். கொரோனா பரவல் காரணமாக மாடவீதிகளில் சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை தங்க கொடிமரத்தில் இருந்து பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டது. இதன்மூலம் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. இதையடுத்து வரும் அக்டோபர் 16ம்தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவம் நடைபெற்ற நாட்களில் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்படி கடந்த 9 நாட்களில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 898பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 38 ஆயிரத்து 190 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ₹10 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரம் செலுத்தியுள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் ₹2 கோடியே 34 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இது ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஒரே நாளில் பக்தர்கள் அதிகளவு செலுத்திய உண்டியால் காணிக்கையாகும்.

Related Stories: