கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா பரபரப்பு கடிதம்!!.. 'தன்னை பற்றிய தகவல்களை 3-வது நபருக்கு தரக்கூடாது என திட்டவட்டம்'

பெங்களூரு: சசிகலா விடுதலை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவரும் நிலையில் தன்னை பற்றிய தகவல்களை 3வது நபரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் அனுப்பி இருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாகிறார். மேலும் சசிகலா செலுத்த வேண்டிய ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தவில்லை என்றால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று 2022ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாவார் என பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி ஆர்.ஐ.டி.-யின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு சிறைத்துறை விளக்கம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா அனுப்பியுள்ள கடிதத்தில் தன்னை பற்றிய தகவல்களை 3வது நபரிடம் பகிர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது ஏற்புடையது அல்ல என நரசிம்ம மூர்த்தி தெரிவித்துள்ளார். இதனிடையே மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ், சசிகலா விடுதலை ஆனதும் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என கூறியுள்ளார். அதிமுகவில் முதலமைச்சர், வேட்பாளர் யார்? என்பது குறித்த போட்டி அவரது உட்கட்சி பிரச்சனை என்று கருணாஸ் தெரிவித்தார். மேலும் அதிமுக கூட்டணியில் உள்ள தனது கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.   

Related Stories: