கோபி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பன் தி.மு.க.வில் இணைந்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகனும், தமிழ்நாடு மருந்து பொருள் விற்பனை சங்க செயலாளருமான கே.கே.செல்வம் 2 நாட்களுக்கு முன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். நேற்று அவர் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார். அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தநிலையில் அமைச்சரின் அண்ணன் கே.ஏ.காளியப்பனும் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.