ஆரக்கிள் கார்ப்பிற்கு டிக்‍ டாக்‍ செயலியை விற்க பைட் டான்ஸ் நிறுவனம் திட்டம்?... என தகவல்

வாஷிங்டன்: ஆரக்கிள் கார்ப்பிற்கு டிக்‍ டாக்‍ செயலியை விற்க பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய-சீன எல்லையில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய வீரர்கள் மீது சீனா திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பொருளாதார ரீதியாக பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் டிக்டாக், ஹலோ, ஷேர்இட் உட்பட 59 ஆப்களுக்கு கடந்த ஜூலையில் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவிலும் சீன ஆப்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்கள் திருட்டு அச்சுறுத்தல் காரணமாக சீன ஆப்பான டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வந்தது.

பின்னர் சீன நிறுவனமான பைட்டான்ஸூக்கு சொந்தமான டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் அல்லது அந்த செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவித்தார். இந்தநிலையில் டிக்‍ டாக்‍ செயலியை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்த அமெரிக்‍காவின் மைக்‍ரோ சாஃப்ட் நிறுவனத்தின் விருப்பத்தை பைட்டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது. மேலும், மற்றொரு அமெரிக்‍க நிறுவனமான ஆரக்கிளிற்கு டிக் டாக் செயலியை விற்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: