சற்று மகிழ்ச்சி தரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,800க்கு விற்பனையாகிறது. மே மாதம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அட்சயதிருதியையான 9ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 வரை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் சற்று மாற்றம் காணப்பட்டது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000க்கு விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,800க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6, 725க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனாலா நகை வாங்குவோர் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

The post சற்று மகிழ்ச்சி தரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.200 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: