மதுரையில் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்தியை அறிந்து மனவேதனை அடைந்தேன்: முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: மதுரையில் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்தியை அறிந்து மனவேதனை அடைந்ததாக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜோதி ஸ்ரீ துர்கா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றிபெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கின்றன என்று முதல்வர் பழனிசாமி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மன உறுதி, விடா முயற்சியை வளர்த்து கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், நேற்று மதுரையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளரின் 19 வயது மகள் ஜோதி துர்கா என்ற மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், நீட்தேர்வு குறித்து பயமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்து வந்தார். ஆனால், அவரை அவரது பெற்றோர் ஆசுவாசப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று தனி அறையில் படித்துக் கொண்டிருக்கும் போது, நீட் தேர்வு பயத்தால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: