கொரோனா காலத்திற்கு பிறகும் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமே நீதிமன்ற விசாரணை தொடரலாம்!: நாடாளுமன்ற குழு அறிக்கை தாக்கல்..!!

டெல்லி: கொரோனா காலத்திற்கு பிறகும் நீதிமன்றங்களில் வீடியோ கான்ஃப்ரன்சிங் முறையிலேயே விசாரணை நடைபெற வேண்டும் என நாடாளுமன்ற குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா தாக்கம் குறித்த நாடாளுமன்ற குழுவின் முதல் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினரும், குழுவின் தலைவருமான திரு. குபேந்தர் யாதவ் அறிக்கையை மாநிலங்களவை தலைவர் திரு. வெங்கைய நாயுடுவிடம் தாக்கல் செய்துள்ளார். கொரோனா காரணமாக வீடியோ கான்ஃப்ரன்சிங் முறை நீதிமன்றங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதை ஆதரிப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், நிதி பரிபாலனை ரீதியாகவும் வீடியோ கான்ஃப்ரன்சிங் முறை சிறந்ததாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதற்கும் வழி கிடைப்பதால் கொரோனா காலத்திற்கு பிறகும் நீதிமன்றங்களில் வீடியோ கான்ஃப்ரன்சிங் முறையிலேயே விசாரணை தொடர வேண்டும் என்றும், அதற்கேற்றவாறு சட்டரீதியாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தின் குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கொரோனா  தடுப்பு விதமாக வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக  நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: