போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கியதாகவும், அதற்காக பணம் கொடுத்ததாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் விசாரணையின் போது அதனை ரியா ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்து உள்ளனர். இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரியா தனது வக்கீல் மூலம் ஜாமீன் கேட்டு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, அப்துல் பஸித், விலாத்ரா, சாவந்த், சாமுவேல் மிராண்டா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களுக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்து உள்ளார். நடிகை ரியாவின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என மும்பை சிறப்பு நீதிமன்றம் தெரித்திருந்தது. போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையின் போது அவரிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்று உள்ளனர் என ரியாவின் வக்கீல் சதீஷ் மானே கூறினார். அவர் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து உள்ளார். மேலும் அவரை கைது செய்தது தேவையற்றது எனவும், நியாயம் இல்லாதது என கூறினார்.

Related Stories: