“விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்?”: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

லக்னோ: நாட்டின் 7 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க எத்தனை டெப்போகளில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி, அம்பானியிடம் லாரி லாரியாக பணம் பெற்றுக்கொண்டு அவர்களை பற்றி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்தி விட்டதாக மோடி குற்றம் சாட்டிய நிலையில், உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்திற்கு சென்ற ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெம்போவில் பணம் அனுப்புவரின் விமான நிலையத்தில் இருந்து வீடியோ வெளியிடுவதாக குறிப்பிட்டிருக்கும் ராகுல் எத்தனை டெம்போக்களில் பணத்தை பெற்று கொண்டு நாட்டின் 7 விமான நிலையங்களை பிரதமர் மோடி தாரை வார்த்தார் என்பது குறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

7 விமான நிலையங்கள் அதானிக்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கும் ராகுல் காந்தி விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்திற்கான விளம்பரத்தையும் தனது வீடியோவில் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி பயணத்தின் போது வெளியிடப்படும் விமர்சன வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெறுவது குறிப்பிடத்தக்கது.

 

The post “விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்?”: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: