பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை

கொல்கத்தா: பாஜக 195-ஐ தாண்டாது என்றும், ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கையுடன் கூறினார். மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாங்கான் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், ‘இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வருவதை திரிணாமுல் காங்கிரஸ் உறுதி செய்யும்.

‘இந்தியா’ கூட்டணி குறைந்தபட்சம் 315 இடங்களிலும், பாஜக அதிகபட்சமாக 190 முதல் 195 இடங்களிலும் வெற்றி பெறும். அதற்கு மேல் அவர்களுக்கு கிடைக்காது. டெல்லியில் இனிமேல் மோடி இருக்கமாட்டார். மோடி இந்த முறை ஆட்சிக்கு வரமாட்டார். மேற்குவங்கத்தில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதனால்தான் பாஜக தலைவர்கள் பயப்படுகிறார்கள். அவர்கள் மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்பதை உணர்ந்துள்ளனர்.

400 இடங்களை கைப்பற்றுவோம் என்று இனிமேல் தற்பெருமை பேச வேண்டாம். பிரதமருக்கு ‘மாட்டுவாஸ்’ சமூக மக்களின் மீது அன்பு இருந்தால், அவர்களுக்கு நிபந்தனையின்றி குடியுரிமை வழங்க வேண்டும். மேற்குவங்கத்தில் சிஏஏ சட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு அந்த சட்டத்தை அவர்கள் ெசயல்படுத்த விரும்பினால், என்னுடைய இறந்த உடல் மீது சென்று தான் அவர்கள் செயல்படுத்த முடியும். சிஏஏ, என்ஆர்சி, யுசிசி சட்டங்களை அமல்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறினார்.

The post பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: