குமரியில் நுரையீரலை தாக்கும் கொரோனா: குணமானவர்கள் தான் அதிகமாக பாதிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா குணமாகி சென்றவர்களும், திடீரென மூச்சு திணறல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மீண்டும் வருகிறார்கள். கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் நுரையீரல் வரை பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 90 பேர் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக  தற்போது கொரோனா குணமானவர்களை கவனிப்பதற்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், கொரோனா நாளுக்கு நாள் புதிய வடிவில் வந்து கொண்டு இருக்கிறது. கொரோனா முற்றிலும் குணம் அடைந்தவர்களுக்கும் திடீரென பாதிப்பு உள்ளது. எனவே கொரோனாவால் குணம் அடைந்த பின்னரும் தனி கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவுக்கு பின், ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சைக்கு வர வேண்டும் என்றனர்.

Related Stories: