நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதி பருவ தேர்வுகள் செப். 21ல் தொடக்கம்!

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதி பருவ தேர்வுகள் செப்டம்பர் 21ம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் பயின்ற கல்லூரிகளிலேயே தேர்வு எழுதலாம் என பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தேர்வு நடைபெறுகிறது. கலை மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும். வெளி மாநிலம், வெளி மாவட்டங்கள், வெளி நாடுகளில் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: