கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இரக்கமற்ற செயல்..!!சக்கர நாற்காலியிலிருந்து நோயாளியை கீழே தள்ளி விட்ட ஊழியர்...!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடக்க முடியாமல் தவித்த உள்நோயாளியை ஊழியர் ஒருவர் சக்கர நாற்காலியிலிருந்து தள்ளிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் ஒருவரை சக்கர நாற்காலியால் வார்டுக்கு அழைத்து வந்தபோது அவரால் இறங்க முடிய வில்லை. இதனையடுத்து கட்டிலுக்கு இறங்கி செல்ல முடியாத  அவரை ஊழியர் ஒருவர் திட்டித்தீர்த்ததோடு, மட்டுமால்லாமல் நாற்காலியிலிருந்து தள்ளிவிட்ட அவலம் நேர்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த மற்ற பணியாளர்களோ அல்லது அங்குள்ள நோயாளிகளின் உறவினர்களோ,  அந்த உள்நோயாளிக்கு உதவ முன்வரவில்லை. பின்னர் கீழே விழுந்த அந்த நோயாளி தட்டு தடுமாறி கட்டிலை பிடித்து மேலே ஏறினார். இந்த கொடூர செயலால் அவரது உடல்நிலை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த காட்சி காண்பவர்களை பதற வைப்பதோடு, மட்டுமால்லாமல் கண்ணீரிலும் ஆழ்த்துகிறது. மனித நேயம் என்பது சிறிதும் இல்லாத அந்த ஊழியரின் இரக்கமற்ற செயலுக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொடூர செயல் மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: