சொல்லிட்டாங்க...

* ஊரடங்கு நடவடிக்கையின்போது, மக்களின் கருத்துகளை கேட்டறியாமல் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கை வெளியிட்டது சட்டவிரோதம். - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

* பெண்களின் உரிமைகளை காத்திட மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* பாஜ என்னும் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக அதிமுக இருக்கிறது. இனி அதன் வாயில் இருந்து ஒருபோதும் மீண்டு வர முடியாது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொழிற்திட்டங்களும், எரிபொருள் திட்டங்களும் தேவை தான். அவை விவசாயத்தை அழிப்பதாக இருக்கக்கூடாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories:

>