திருச்சி - ராமேஸ்வரம் இடையே 100 கிமீ வேகத்தில் ரயில் இயக்கம்: தண்டவாளத்தின் தரம் பரிசோதனை

ராமேஸ்வரம்: ஊரடங்கால் 4 மாதமாக ரயில் ஓடாததால், தண்டவாளத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்க, திருச்சி - ராமேஸ்வரம் இடையே நேற்று 100 கி.மீ வேகத்தில் அதிவேக ரயில் இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் 4 மாதத்திற்கு மேல் ரயில்கள் இயக்கப்படவில்லை. தற்போது தண்டவாளங்களின் நிலை மற்றும் உறுதித்தன்மை குறித்து ரயில்வே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரை மணிக்கு 100 கிமீ வேகத்தில் சோதனை ஓட்ட அதிவேக ரயில் நேற்று இயக்கப்பட்டது.

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை நான்கு பெட்டிகள் மட்டும் இன்ஜினுடன் இணைக்கப்பட்டு ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டன. சோதனை ஓட்ட ஆய்வு மற்றும் மானிட்டரிங் கருவிகள் பொருத்தப்பட்ட கோச்சில் ரயில்வே அதிகாரிகள் பயணித்தனர். மணிக்கு 80 முதல் 100 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. பகல் 12.45 மணியளவில் பாம்பன் பாலத்தை ரயில் வந்தடைந்தது. பாலத்தில் 15 முதல் 20 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு பகல் ஒரு மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை அடைந்தது.

ரயில் சோதனை ஓட்டத்தை முன்னிட்டு திருச்சி முதல் ராமேஸ்வரம் வரையிலான பாதையில் விபத்து எதுவும் ஏற்படாமல் இருக்க குடியிருப்புவாசிகளிடம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.

Related Stories: