ஒருவர் தானம் செய்தால் 2 பேரின் உயிர் காக்கப்படும்: பிளாஸ்மா தானம் வழங்க முன்வர வேண்டும்...அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.!!!

சென்னை: சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பிளாஸ்மா தானம் தொடங்கிய 20 நாட்களில் இதுவரை 76 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இதனை 89 நோயாளிகளுக்கு செலுத்தியுள்ளோம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வர வேண்டும் என்றார்.

சென்னை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் பிளாஸ்மா வங்கி துவங்க ஐ.சி.எம்.ஆர் அனுமதி அளித்துள்ளது. ஒருவர் பிளாஸ்மா தானம் செய்தால் 2 பேரின் உயிர் காக்கப்படும். சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில்  பிளாஸ்மா சிகிச்சை மூலம் 70 பேர் குணமடைந்துள்ளனர். பிளாஸ்மா தானம் வழங்கியதன் மூலம் முன்னுதாரணமாக காவல்துறையினர் விளங்குகின்றனர்.

40 காவலர்கள் ஒரே நேரத்தில் பிளாஸ்மா தானம் செய்தனர். சென்னையில் 88%, தமிழகத்தில் 81% பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 14 நாட்களுக்கு பின் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்றார்.

Related Stories: