இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது: சென்னையில் கனிமொழி எம்பி பேட்டி'

சென்னை: டெல்லியில் இருந்து திமுக எம்பி கனிமொழி நேற்று மாலை 4.30 மணி விமானத்தில் சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நம்முடைய உணர்வுகளை புரிந்துகொண்டு சிஐஎஸ்எப் உயர் அதிகாரிகள் அவர்களாகவே நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி. இது இங்கு மட்டும் நடக்கும் சம்பவங்கள் அல்ல. பல இடங்களில் குறிப்பாக, மத்திய அரசு அலுவலகங்களில் இதுபோன்ற மனப்பான்மை உள்ளது. இதை எல்லாம் விட எனக்கு இந்தி தெரியுமா, தெரியாதா என்பது பிரச்னையல்ல. இந்தி தெரிந்தால்தான் இந்தியாவில் இருக்க முடியும். ஒரு மதத்தை பின்பற்றினால்தான் இந்த நாட்டில் இருக்க முடியும். அப்படி செய்தால்தான் இந்தியராக ஏற்றுக்கொள்வோம் என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கனிமொழி கூறினார்.

Related Stories:

>