மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்: இன்று நடக்கிறது

பொன்னேரி: திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய அவசர செயற்குழு கூட்டம், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அறிவிப்பின்படி இன்று 4:00 மணியளவில் வல்லூரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது. இதில், ஒன்றிய அவைத் தலைவர்  கா.சு.தன்சிங் தலைமை வகிக்கிறார். மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் ஆலோசனையில் சமூக இடைவெளியை பின் பற்றி செயற்குழு கூட்டம் நடைப்பெறுகிறது.

இந்த கூட்டத்தில், கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சமூக இடைவெளி பின்பற்றுதல் மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதில், ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள் அனைவரும் கூட்டத்திற்கு  தவறாமல் கலந்து கொள்ளுமாறு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

>