முழு ஊரடங்கால் ஆடி பெருக்கில் பேரூர் படித்துறை வெறிச்சோடியது

கோவை: தமிழகத்தில் ஆடி மாதத்தில் வரும் 18ம் நாள் ஆடிபெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது.  பொதுவாக ஆடி பெருக்கு நாளில் பொதுமக்கள் ஆற்று படுகைகளில் தங்கள் முன்னோர்களுக்கு  பிடித்த உணவு வகைகளை சமைத்து வழிபாடு செய்வது வழக்கம். கோவை பேரூர் படித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பெருக்கு நாளில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வழிபடுவர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக நீர்நிலைகளில் கூட்டம் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், பேரூர் படித்துறைக்கு வழிபாடு செய்ய யாரும் செல்லவில்லை. படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கினால் நீர்நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.  மேலும், கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.

Related Stories: