'நடிகர் சுஷாந்த்சிங் உடன் ஓர் ஆண்டு சேர்ந்து வாழ்ந்தேன்': உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நடிகை ரியா ஒப்புதல்..!!

டெல்லி: நடிகர் சுஷாந்த்சிங் உடன் ஓர் ஆண்டு சேர்ந்து வாழ்ந்ததாக அவரது காதலி ரியா கூறியுள்ளார். அவருக்கு எதிராக பாட்னா காவல் நிலையத்தில் பதிவான வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் ரியா குறிப்பிட்டுள்ள சில விவரங்கள் ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, சுஷாந்த்சிங் உடன் ஓராண்டு ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்ததாக ரியா குறிப்பிட்டுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ஜூன் 8ம் தேதியன்று சுஷாந்த்சிங்கின் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஜூன் 14ம் தேதியன்று சுஷாந்த்சிங் தற்கொலை செய்துக் கொண்டதால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. தற்போது சுஷாந்த்சிங்கின் வங்கி ஆவணங்களும் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளது. அதில் சுஷாந்த்சிங் வங்கி கணக்கில் இருந்து பணத்தை ரியா குடும்பத்தினர் எவ்வாறு செலவிட்டனர் என்பது தெரியவந்தது. ரியாவின் சகோதரர் விமான டிக்கெட் வாங்கியது, நட்சத்திர ஹோட்டலில் தங்கியது போன்ற  செலவுக்கு சுஷாந்த்சிங் பணத்தை செலவிட்டது தெரியவந்தது. இதனிடையே சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்துவிட்டது.

தற்போது சுஷாந்த்சிங் மரணம் தொடர்பாக மும்பை போலீசாரும், பாட்னா போலீசாரும் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை தொடர்பாக விசாரித்து வரும் மும்பை போலீசார், திரையுலக பிரபலங்களிடம் வாக்குமூலம் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மும்பை போலீஸ் முடிவு செய்துள்ளது.

Related Stories: