தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென தீ விபத்து

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஐதராபாத் விரைவு ரயிலில் பிடித்த தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது. தெற்கு மத்திய ரயில்வே (SCR) தலைமையகமான ரயில் நிலையம் அருகே மேட்டுகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு உதிரி ஏசி பெட்டிகளில் இருந்து அடர்ந்த புகை வெளியேறியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

வாஷிங் லைனில் நிறுத்தப்பட்டிருந்த பெட்டிகளில் யாரும் இல்லாததால் இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் ஏணிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெட்டிகளுக்குச் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

The post தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: