குடியரசுத் தலைவரின் வாழ்க்கை பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!

டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி , குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவரின் வாழ்க்கை பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் “குடியரசுத் தலைவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். நமது தேசத்திற்கான அவரது சிறப்பான சேவை மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் அவரது ஞானமும், முக்கியத்துவம் வாய்ந்த ஈடுபாடும் ஒரு வலுவான வழிகாட்டும் சக்தியாகும். அவரது வாழ்க்கைப் பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அவரது அயராத முயற்சிகள் மற்றும் தொலைநோக்கு தலைமைக்காக இந்தியா எப்போதும் அவருக்கு நன்றி செலுத்தும். அவர் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் ஆசீர்வதிக்கப்படுவாராக,”இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “ஜனாதிபதி அவர்கள் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நிறைவான வாழ்க்கை அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவி மருத்துவர் சுதேஷ் தன்கருடன், ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனிடையே தனது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் மக்கள் நலத்துடனிருக்க வேண்டும் என வழிபாடு செய்ததாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

The post குடியரசுத் தலைவரின் வாழ்க்கை பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: