தொடரும் சாரல் மழை: பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே பிளவக்கல்லில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. இந்த அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணையில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பெரியாறு அணையின் மொத்த உயரம் 47.56 அடியாகும். கடந்த 20ம் தேதி பெரியாறு அணையில் 14.44 அடியாக நீர்மட்டம் இருந்தது. நேற்று 17.55 அடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்ந்தாலும் குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரைப்போல் காட்சி அணை காட்சி அளிக்கிறது.

தொடர்ந்து மழை பெய்தால் அணையில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25.31 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கோவிலாறு அணையின் மொத்த உயரம் 42.64 அடியாகும். அணையில் தற்போது நீர்மட்டம் 10.05 அடியாகும். அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 0.08 கனஅடி வீதம் வந்துகொண்டிருக்கிறது.

Related Stories: