காலியாக உள்ள 57 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி உரிய நேரத்தில் அறிவிப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 56 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதி உட்பட 57 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகள் உட்பட 7 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதி உட்பட 8 இடங்களுக்கு செப்டம்பர் 7ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இவற்றுக்கு நடக்க இருந்த தேர்தல், கொரோனா பரவல் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை காரணம் காட்டி நேற்று முன்தினம் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், தேர் தல் ஆணைய செய்தித்தொடர்பாளர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது என்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடத்திய பிறகு தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இது தொடர்பான அறிவிப்பு தகுந்த நேரத்தில் வெளியாகும்,’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: