ஓய்வுபெற்ற டாக்டர்கள், பேராசிரியர்களுக்கு உயர் ஓய்வூதியம் வழங்கவேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு 12.7.18 அன்று வெளியிட்ட ஆணையின்படி, 2009ம் ஆண்டிற்கு முன்பு ஓய்வுபெற்ற டாக்டர்கள், பேராசிரியர்களின் ஊதிய விகிதம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. அதன் பயனாக 2009ம் ஆண்டிற்கு முன்பு ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வழி பிறந்தது. ஆனால் பலருக்கு அந்த ஆணையின்படி உயர் ஓய்வூதியம் வழங்கப்படாமலே உள்ளது. இதனால் பல டாக்டர்கள், பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலம் என்பதை காரணம் காட்டி அரசு எடுத்த முடிவை தள்ளிப் போடுவதும் செயல்படுத்துவதை நிறுத்துவதும் உசிதமானதல்ல. எனவே, தமிழக அரசு ஏற்கனவே எடுத்த முடிவை செயல்படுத்தி, ஓய்வுபெற்ற மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்களின் கவலையை போக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: