கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு?: மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:  ஜெயராஜ்  பென்னிக்ஸ் கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி. என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு?. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: