அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றியவர்கள் புலம்பெயர்ந்தவர்கள்; H1B விசா நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து சுந்தர்பிச்சை டுவிட்...!!

வாஷிங்டன்; உலக முழுவதும் கொரோனா பாதிப்பு தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா வந்து வேலை செய்வோருக்கு வழங்கப்படும் ஹெச்-1பி மற்றும் ஹெச்-4(ஹெச்-1பி உடையவர்களின் மனைவிகள்) மற்றும் இதர வேலை தொடர்பான விசாக்களை நடப்பாண்டின் இறுதி வரை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒவ்வொரு துறையிலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடன் அமெரிக்கர்கள் போட்டி போட வேண்டிய நிலை இருக்கிறது. தற்காலிக வேலைவாய்ப்பிற்காக லட்சக்கணக்கான ஏலியன்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து தங்கியிருக்கின்றனர். இதுபோன்ற விஷயங்கள் அமெரிக்க ஊழியர்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்து தவிக்கும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு புதிய உத்தரவின் மூலம் உரிய வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹெச்-1பி விசா நடப்பாண்டின் இறுதி வரை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, புலம்பெயர்ந்து வந்தவர்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றியுள்ளனர். மேலும், இது தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவராக திகழ்கிறது, இன்று கூகிள் அதுவும் உள்ளது. அரசின் அறிவிப்பால் ஏமாற்றமடைகிறோம். நாங்கள் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு தொடர்ந்து நின்று அனைவருக்கும் வாய்ப்பை விரிவுபடுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார். ஹெச்-1பி விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #H1Bvisas ஹெஷ்டேக் டுவிட்டரில் டிரென்டாகி  உலகளவில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: