சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஒவ்வொரு நாளும் குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம்(19ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும்.

அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், முந்தைய நாள் விலையிலேயே தங்கம் விற்பனையானது. நேற்று (20ம் தேதி) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,690-க்கு விற்கப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராமூக்கு ரூ.3.50 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை ஆனது.

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,860க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்தது… தங்கத்தைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்த வண்ணம் உள்ளது. அதாவது மே 1ம் தேதி ஒரு கிராம் வெள்ளி விலை 86 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்கப்பட்டது. முதல் முறையாக கிராம் ரூ.100-ஐ தாண்டியது வெள்ளி. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கு விற்பனையாகியது. அதே நேரத்தில் மே 1ம் தேதி முதல் நேற்று வரை 20 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.14.50 உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு appeared first on Dinakaran.

Related Stories: