அனுமதி கொடுத்தால் ஜெகநாதரே மன்னிக்கமாட்டார்; புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்...!

டெல்லி: பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமுமம் உடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.

தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்கு சென்று ஓய்வு எடுப்பாரக்ள். அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்கு திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவத்துக்கு படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. இந்த ரதயாத்திரைக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மரத்தால் தேர் செய்யப்பட்டு, திருவிழா முடிந்தவுடன் அந்த தேர் கலைக்கப்படும். இந்த மூன்று தேர்களுக்கு தாலத்வாஜா, தேபேத்லன், நந்திகோஷா என்று பெயரிடப்பட்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு தேரும் ஏற்குறைய 14 அடி நீளம்வரை இருக்கும். தேர் தெருக்களில் நகர்ந்து வரும்போது, மக்கள் மேள தாளங்களை இசைத்தும், இசைக்கருவிகளை மீட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கிலான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து திரும்புவார்கள். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 23-ம் தேதி நடைபெறவிருந்த  பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாட்டே தலைமையிலான அமர்வு, அதிகளவில் மக்கள் கூடுவதை அனுமதிக்க முடியாது. தற்போது அனுமதி கொடுத்தால் ஜெகநாதரே மன்னிக்கமாட்டார் எனக்கூறி பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்து உத்தரவிட்டார் ஊரடங்கு காரணமாக இதுபோன்று பல முக்கிய கோயில்களின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: