தவ்ஹீத் ஜமாஅத் ரத்ததானம்

காஞ்சிபுரம்: உலக குருதி கொடையாளர்கள் தினத்தையொட்டி, தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிளைத் தலைவர் அன்சாரி தலைமை தாங்கினார். தவ்ஹீத் ஜமாஅத் மருத்துவ சேவை அணி சர்புதீன் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சார்பில், விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உரிய நேரத்தில், உயிர் கொல்லி கொரோனா அச்சமுள்ள சூழலிலும், அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 22 யூனிட் அவசர ரத்ததானம் செய்யப்பட்டது.

Related Stories: