ருசியின்மை கோளாறும், வாசனை இழப்பும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் : மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி : வாசனை, சுவை தெரியவில்லை எனில் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. தற்போது வரை கோவிட் 19 என்னும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசியும் மருந்துகளும் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளில் இருக்கும் அனைத்து மருந்தியல் நிபுணர்களும் மருத்துவக்குழுவும் தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்நோய் தாக்கத்தின் அறிகுறிகளாக தொண்டை புண், சளி, இருமல், அதிகப்படியான உடல் வெப்பநிலை கொண்டிருக்கும் காய்ச்சல் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக எச்சரிக்கப்பட்டது. தற்போதும் இவைதான் பிரதான அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. எனினும் இந்த வரிசையில் உலர்ந்த தொண்டையும், தலைவலியும் வயிற்றுபோக்கு பாதிப்புகளும் கூட இத்தொற்று இருந்தவருக்கு ஏற்பட்டது. சமீப நாட்களாகவே எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்றுக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது இவர்களுக்கு வாசனை உணர்வும் சுவை உணர்வும் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. அச்சுறுத்தும் கொரோவா வைரஸ் அறிகுறிகளில் தற்போது இவையும் சேர்ந்திருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த காது தொண்டை நோயின் அகாடமி தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கிய அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு பொருள்களின் மணமும், சுவைத்தால் நாக்கில் சுவை தெரியாமலும் இருக்கும் அறிகுறியும் தென்படும் என்றும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கான அறிகுறிகள் பட்டியல்

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனாவுக்கான அறிகுறிகள் பட்டியலில்,நுகர்வு, சுவைத் தன்மையை இழப்பதும் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கொரோனாவுக்கான அறிகுறிகள் பட்டியல் பின்வருமாறு..

காய்ச்சல்

இருமல்

உடல் சோர்வு

மூச்சுத் திணறல்

தசை வலி (myalgia)

மூக்கு அடைப்பு (Rhinorrhea)

தொண்டை வலி( sore throat)

வயிற்றுப்போக்கு( diarrhea)

சளி(expectoration)

வாசனை இழப்பு (anosmia)

சுவை இழப்பு(ageusia)

Related Stories: