14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதியில்லை,..அமைச்சர் சுரேந்திரன் தகவல்

திருவனந்தபுரம்: மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி சபரிமலை திறக்கப்படும் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். கொரோனா பரவலாம் என்பதால் சபரிமலை கோயில் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. கோவில்களில் பூஜைகள் மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர் தளர்த்தப்பட்டு ஜூன் 8 ம் தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில்  நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று தேவசம்போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோவில் நடைதிறப்பு, பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்  குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என தந்திரி கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுரேந்திரன், 14ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.

Related Stories: