ஸ்ரீபெரும்புதூர் டாஸ்மாக் கடைகளில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் வாங்கி செல்பவர்களால் கொரோனா அபாயம்: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ஸ்ரீபெரும்புதூர்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் அதிகமாக கொரோனா தாக்கம் அதிகமாக பரவி உள்ளதால், சென்னை மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமகன்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வந்து மூட்டைகளில் மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூர் உள்ளது. சென்னை அருகே உள்ள இருங்காட்டுகோட்டை, சுமந்திரம்பேடு, மண்ணிவாக்கம் ஆகிய பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தற்போது சென்னை மாவட்டதை சேர்ந்த குடிமகன்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வரும் சென்னை வாசிகள் மூட்டைகளில் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு சென்னையில் உள்ள குடிமகன்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு ஒருசில டாஸ்மாக் கடை விற்பனையாளர்களும், பார் உரிமையாளர்களும் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று அதிகமாக உள்ள சென்னை மாவட்டத்தில் இருந்து மது பாட்டில்கள் வாங்க வருபவர்களால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.      

Related Stories: