பாஜ முன்னாள் தலைவர் லட்சுமணன் மறைவு அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் லட்சுமணன் மறைவுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து திறம்பட பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். அவரின் மறைவு தமிழ்நாட்டிற்கு ஒரு பேரிழப்பாகும்.முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: பாஜ கட்சியின் ராசியான தலைவர் என்று அனைவராலும் போற்றப்படுகின்ற பெரியவர் கே.என்.லட்சுமணன் இறைவனடி சேர்ந்திருக்கிறார்.

Advertising
Advertising

பாமக நிறுவனர் ராமதாஸ்: லட்சுமணன் மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழக பாஜ தலைவராக இருமுறையும், எம்எல்ஏவாக ஒரு முறையும் பணியாற்றியவர். என்னுடன் அன்பாகவும், மரியாதையுடனும் பழகிய மனிதர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: தமிழக பாஜ முன்னாள் தலைவர் லட்சுமணன் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

Related Stories: