2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்க்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: ஐநாவின் வேளாண்மை அமைப்பு தகவல்

டெல்லி: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, மேலும் அதிலிருந்து மீளாத நிலையில் செங்கடலின் இருபுறத்திலும் உருவாகும் வெட்டுக்கிளிக் கூட்டம் எகிப்து, சூடான், யேமன், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதி, ஆகிய பகுதிகளைப் பாதித்து வருகின்றது. மேலும் இந்த வகை வெட்டுக்கிளிகள் கூட்டமாகச் சேர்ந்து விட்டால் ஒரு நாட்டையே துவம்சம் செய்து விடும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்குக் காரணம் இந்த ஈரப்பதமான காற்று, லேசான குளிர்கால பகுதி, இவையே பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு ஏற்ற காலநிலை என்பது ஆய்வாளர்களின் கருத்து என்பதாகும். பாதிப்பை ஏற்படுத்தும் அகோரப் பசி கொண்ட வெட்டுக்கிளிகள் கூட்டத்தில் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் வரை இருக்கக் கூடும், தனது உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத எந்தத் தாவரத்தையும் விட்டு வைப்பதில்லை. சில கிலோ மீட்டர் பரப்பளவில் மொத்தமாகச் செல்லும் இவை, நாளொன்றுக்கு 200 கிலோ மீட்டர்கள் பறந்து சென்று பேரழிவை ஏற்படுத்தும். இந்த வெட்டுக்கிளிக் கூட்டம் 2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்த்து விடும் என ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால்தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தான் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்ததும். சோமாலியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகள் தேசிய நெருக்கடியை அறிவித்தது. எரித்திரியாவில் 350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2 மில்லியன் டன் உணவுப் பொருளை ஒரே நாளில் தின்று தீர்த்த இந்த வெட்டுக்கிளிக் கூட்டம், கென்யாவில் 40 முதல் 60 கிலோ மீட்டர் பரப்பளவில் பயிர்களை சாப்பிடுவதாக தெரியவந்துள்ளது.

Related Stories: